தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், செம்பியன்மாதேவிப்பட்டினம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 4 ஆயிரம் பாய்மர படகு, பைபர்கிளாஸ் படகு, கட்டுமரங்கள் உள்ளன. இந்தநிலையில் விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். ஆனால் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதாலும், கடல் சீற்றம் அதிகமாக இருப்பதாலும் 2,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாட்டுப் படகு மீனவர்கள் தங்களது படகுகளை அந்தந்த கிராமங் களில் உள்ள மீன்பிடி துறை முகங்களில் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
May 21, 2017
0
Tags
Share to other apps